வெள்ளி, 11 டிசம்பர், 2015

cchep TWES school programme 3.12.2015



pls visit our webshttp://cchepnlg.blogspot.in/http://cchepeye.blogspot.in/http://consumernlg.blogspot.in/

cchep Cherangodu Eye camp 6.12.2015

புதன், 21 அக்டோபர், 2015

CCHEP NLG YOUTH DEVELOPMENT AWARENESS GDR



pls visit our webshttp://cchepnlg.blogspot.in/http://cchepeye.blogspot.in/http://consumernlg.blogspot.in/

CCHEP NLG IODINE AWARNESS PROGRAMME MSS UPPATTY 20.10.15









அயோடின் குறைபாட்டால் இரும்பு சத்து குறைபாடு, ஏற்படுகிறது
அயோடின் உப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
பந்தலூா்,
அக். 23; பந்தலூா் அருகே உப்பட்டி எம் எஸ் எஸ் உயர்நிலைப்பள்ளியில் உலக அயோடின் தினத்தை
முன்னிட்டு அயோடின் விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கவிதா தலைமை தாங்கினார்.
  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்
பேசும்போது அயோடின் பற்றாக்குறையால் உடல் வளர்ச்சி இன்மை, முன் கழுத்து கழலை,
  இரும்பு சத்து குறைபாடு, மந்த தன்மை, பிறவி குறைபாடுகள்,
ஊனதன்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
 
எனவே அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்துவதால் இதுபோன்ற குறைபாடுகளை களையலாம்
கடைகளில் எடுக்கபட்ட உப்பு மாதிரிகளில் 48 சதவீதத்தில் மட்டுமே போதுமான அளவு அயோடின்
உள்ளது. கடைகளில் எடுக்கப்பட்ட
  கல் உப்பில்
33.4 சதவீத அளவில் மட்டுமே அயோடின் உள்ளது. அயோடின் சத்து கடல்களில் உள்ள பவளபாறை
உள்ளிட்ட வற்றில் அதிகமாக உள்ளது.
  எனவே மீன்
உள்ளிட்ட கடல் வாழ் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். ஒரு நாளைக்கு நமக்கு 150 முதல்
200 மைக்ரோ கிராம் அளவு அயோடின் தேவை, உப்பு வாங்கும் முன் பாதுகாப்பான முறையில் உள்ள
உப்புகளை பார்த்து வாங்க வேண்டும் காலாவதி தேதி மற்றும் பாக்கெட்டில் சிரிக்கும் சூரியன்,
உணவு தர கட்டுபாட்டு பதிவு எண் போன்றவற்றை கவணித்து வாங்க வேண்டும்
   அயோடின் சத்து இல்லாத உப்புகளை தவிர்க்க வேண்டும்
என்றார்.
   நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்
மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

திங்கள், 19 அக்டோபர், 2015

CCHEP Ganthi seva maiyam Abdulkalam birthday pdr convent 19.10.15



கூடந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி கட்டுரை போட்டி நடத்தப்பட்டதுஇந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைப்பெற்றது   நிகழ்ச்சிக்கு பள்ளி
தலைமை ஆசிரியர் சகோதரி செலின் தலைமை
தாங்கினார்கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், பள்ளி
தாளாளர் சகோதரி எட்வின்  மகாத்மா
காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்அப்துல் கலாமின் சிறப்புகள் மாணவா்களின் பங்களிப்பு ஆகியன குறித்து தேவாலா ஜிடீஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசினார்தொடர்ந்து பள்ளியில் நடைப்பெற்ற
கட்டுரை போட்டியில் 6/8ம் வகுப்பு பிரிவில் முதல் இடம் நிவ்யா இரண்டாம் இடம் தமிழ்ச்செல்வி
மூன்றாம் இடம் வினித்தா 9/10ம் வகுப்பு பிரிவில் முதல் இடம் ரம்யா இரண்டாம் இடம் யுவராணி
மூன்றாம் இடம் கோகிலா பிடித்த மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் காந்தி
சேவை மைய நிர்வாகிகள் அகமது கபீர், செந்தாமரை
தனிஸ்லாஸ் உட்பட மாணவிகள் பலர் பங்கேற்றனர். 
முன்னதாக மாணவி சிவகாமி வரவேற்றார். 
முடிவில் நுகர்வோர் மன்ற ஆசிரியர் மார்ட்டின் நன்றி கூறினார்.




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

வெள்ளி, 13 மார்ச், 2015

முதன்மை கல்வி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் 3/2015



முதன்மை கல்வி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி தலைமை வகித்தார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது பல தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது நுழைவு தேர்வு எழுதவேண்டும் என கட்டாய படுத்த படுகிறது.  இவற்றை தடுக்க வேண்டும்.  அனுமதி அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்  பட்டியல்  செய்தி தாள்களில் வெளியிட வேண்டும்.  கல்வி கட்டணம் மக்கள் எளிதில் தெரிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்கள் உரிய பராமரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அனைத்து பள்ளிகளிலும் புரொஜெக்டர் சரிசெய்து தர வேண்டும் என்றார்.  
மேலும் புளுமௌண்டன் நுகர்வோர் சங்க தலைவர் ராஜன், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் குன்னூர் நுகர்வோர் சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் பேசும்போது பள்ளிகளில் நுகர்வோர் மன்றம் அமைக்க வேண்டும்.  மாணவர் சேர்க்கை பல தனியார் பள்ளிகளில் தற்போது தொடங்கிவிட்டனர்  தடை செய்ய வேண்டும்,   மாணவர் சேர்க்கை கல்வி உரிமை சட்ட விதிப்படி உச்ச பட்சம் நிர்ணயம் செய்ய வேண்டும்.   என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி பேசும்போது  அரசு பள்ளிகளில் மாணவர்கள் வாசிப்பு திறன் குறைந்த மாணவர்கள் திறன்மேம்பட  புதிய முறையில் வாசிப்பு அட்டைகள் மூலம் சிறப்பு பயிற்சி  32 நாட்கள் அளிக்கபடுகிறது.  கூடலூர் பகுதியில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மொழிக்கும் இந்த அட்டை பயிற்சி அளிக்கபடவுள்ளது. இது அரசு பள்ளிகளில் மட்டும் மேற்கொள்ளபடுகிறது.  தினசரி செய்தி தாள்கள் வாசிப்பு பழக்கம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.  அரசு பள்ளிகளில் வரும் கல்வி  ஆண்டு முதல் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் கணினி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.  மாணவர் சேர்க்கைக்கு  கட்டிடதகுதி சம்பந்தபட்ட வட்டாட்சியர் மூலம் பெற்று அதன் அடிப்படையில் ஆங்கில வழி கல்விக்கு ஒரு பிரிவும், தமிழ் வழி  கல்விக்கு மூன்று பிரிவுகளும் அனுமதி வழங்க படுகிறது.  கல்வி உரிமை சட்டப்படி 30 முதல் 40 மாணவர்கள் வரை சேர்க்கைக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.  ஒரே வகுப்பறையில் அதிக மாணவர்கள்  வைத்தால் அப்பள்ளி மிது நடவடிக்கை எடுக்கப்படும்.  மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தகூடாது. புகார் பெறபட்டால் அப்பள்ளிகள் மிது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். அனைத்து பள்ளிகளிலும் தமிழ்  கட்டாயம் படிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டு உள்ளது.  நீலகிரியில் 71  பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளது.   தற்போது CBSC  ICSC பள்ளிகளும் பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.   அவற்றின் அங்கீகாரம் படிவங்கள் இயக்குனருக்கு அனுப்பட்டுள்ளது.  நுகர்வோர் மன்றம் அமைக்க பட்ட பள்ளிகளில் தொடர்ந்து கூட்டம் நடத்த அறிவுரைகள் வழங்கபடும்.   ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் மூலம் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது அது முழுமையாக மாணவர்களிடையே சென்று சேரும்.  அரசு சார்பில் கல்வி மேம்பாட்டிற்கு  பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.   இவை மக்கள் பயன் படுத்தி மாணவர்களை அரசு பள்ளிகளில்  சேர்க்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முதன்மை கலவி அலுவரரின் நேர்முக உதவியாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

சனி, 31 ஜனவரி, 2015

பந்தலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் 31.01.2015


பந்தலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பந்தலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை  தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய  செயலாளர் பொன் கணேசன்,  ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலர் சுப்பிரமணி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், சமுக ஆர்வலர்கள் காளிமுத்து செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் கணேஷன் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் அமராவதி ராஜன்   உதகை அரசு மருத்துவமனை கண் மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 150.கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  இதில் 20 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் முகாமில் சேவை புரிந்தனர்.
முகாமில் கண் தொழில் நுட்புனர் கலாவதி ஸ்ரீதர், கூடலூர்  நுகர்வோர் மைய துணை தலைவர் செல்வராஜ், மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகி  சந்திரன்,  மருத்துவமனை உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


















கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
















pls visit our webs http://cchepnlg.blogspot.in http://cchepeye.blogspot.in http://consumernlg.blogspot.in

செவ்வாய், 27 ஜனவரி, 2015

இலவச கண் சிகிச்சை முகாம் - பந்தலூர் 31.01.2015

இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் அரசு மருத்துவ மனையில் 31.01.2015  சனிக்கிழமை அன்று  காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.  கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சரிட்டபிள்  ட்ரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்தும் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் உதகை அரசு மருத்துவ மனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு அனைத்து விதமான கண் நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிப்பதோடு கண் புரை நோயினால் பாதிக்கபட்டவர்களுக்கு  உதகை அரசு மருத்துவ மனையில்  முறையான லேசர் முறையில் இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்து தரப்படும். கண் புரை அறுவை சிகிச்சை தேவை உள்ளவர்கள் குடும்ப அட்டை நகல் எடுத்து வரவும்.  உதவிக்கு ஆள் தேவை படின் உடன் ஒருவரை அழைத்து வரவும்.  கண் புரை அறுவை சிகிச்சை, மருந்துகள், கருப்பு கண்ணாடி, உணவு ஆகியன இலவசமாக வழங்கப்படும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின்

இப்போது நீங்கள் ?

இதற்கு முந்தைய பதிவில், சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் நகலை கொடுத்திருந்தேன். அதற்கு காரணம், நீதிமன்றம் எப்படி வழக்கை பரிசீலிக்கிற்து என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. இப்பொழுது தீர்ப்பின் அடிப்படையில் உங்களுக்கு விளக்கம் தருகிறேன்.

A. சென்னை, வேளச்சேரியை சார்ந்த K.S. Sriram என்பவர், சென்னை அடையாரி லிருக்கும் விவேக் அன்கோ -வில் ஒரு கெல்வினேட்டர் ரெப்பிரிஜியேட்டர் ஒன்றை வாங்கினார். ஆனால் அது ஆரம்பம் முதலேயே சரியாக வேலை செய்ய வில்லை. எனவே அவர் உடனடியாக் விவேக் அன்கோவின் சர்வீஸ் செண்டருக்கு புகார் செய்தார். அவர்கள் மேற்படி பழுதை சரி செய்ய முடியாது என கூறி விட்டனர். எனவே அவர் சர்வீஸ் செண்டருக்கு ஈ- மெயில் மூலம் புகார் செய்துவிட்டார். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பினார். பதில் எதுவும் கொடுக்காததால், அவர் கீழ் கண்ட கோரிக்கைக்காக நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

1. இந்த ரெப்பிரிஜியேட்டருக்கு பதில் புதிய ஒன்று மாற்றி தரவேண்டும்.
2. மன உளைச்சல் போன்றவைகளுக்காக Rs. 15,000 / - நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
3. வழ்க்கு தொடர ஆகும் செலவுக்கு வழக்கு தொகையாக Rs. 1,000 /-வழங்கவேண்டும்.
மேற்படி மனு ( Complaint ) அதற்கு ஆதாரங்களையும் ( Proof Affidavits ) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆதாரங்கள் தீர்ப்பின் நகலில் Complainant Doccuments என குறிப்பிடப்பட்டுள்ள ( EX. A1 to EX. A6) ஆவணங்களின் நகல்களாகும்.

மேற்படி மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர் மனுதாரர்களுக்கு (OppositeParty) நீதி மன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

B. எதிர் தரப்பினர் அதாவது விவேக் அன் கோ, மேற்படி குற்றச்சாட்டைமறுத்து பதில் மனு ( Version ) தாக்கல் செய்தனர். அதில், மனுதாரருக்கு ரெப்பிரிஜி யேட்டர் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். தாங்கள் விற்பனையாளர் என்றும், உற்பத்தியாளரையும் எதிர்மனுதாரராக சேர்க்கப்படவில்லை. எனவே இந்த குறைபாட்டிற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என கூறப்பட்டது. ஆனால் அவர்கள் தரப்புக்கு ஆதாரமாக் எவ்வித ஆவணங்களும் ( Proof affidavit - Opposite Party Doccuments ) கொடுக்கப்படவில்லை.

C. வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர் மனுதாரின் ஆட்சேபணையை, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவை மேற் கோள் காட்டி நிராகரித் தது.

1. மனுதாரருக்கு, எதிர் மனுதாரர் பழைய ரெப்பிரிஜியேட்டருக்கு பதில் புதிய ஒன்றை மாற்றி கொடுக்க வேண்டும்.
2. நஷ்ட ஈடாக மனுதாரருக்கு Rs. 5,000 /- வழங்கவேண்டும்.
3. நீதிமன்ற செலவாக Rs.1000 /- வழங்கவேண்டும்.

இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இப் பதிவின் மூலம் தாங்கள் வழக்குக்கு தேவையாக எந்தெந்த ஆவணங்களை ஆதாரமாக நீதிமன்றத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதையும், வழக்கை நீதிமன்றம் எவ்விதம் பரிசீலிக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு இருப்பீர்கள். அதோடு சில நீதிமன்ற சொற்களையும் தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.

நுகர்வோர் வழக்கு எண்:------------------ C C No.
மனுதாரர் ----------------------------------- Compainant.
எதிர் மனுதாரர்------- -----------------------Opposite Party.
மனு ------------------------------------------ Petition.
எதிர் மனு------------------------------------- Version.
ஆதார ஆவண பிரமாண வாக்குமூலம் -- Proof Affidavit.
ஆதார ஆவணங்கள்------------------------- EX ( Exhibit ).

இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தாரளமாக் கேளுங்கள்.
இப்பொழுது நீங்கள் நுகர்வோர் வழக்கு தொடரும் அளவிற்கு விஷயங்களை அறிந்து விட்டீர்கள் !. இப்பொது நீங்கள் பாதி வழக்கறிஞர் தான்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

இலவச கல்வி உரிமை சட்டம் 2009

இலவச கல்வி உரிமை சட்டம் 2009 -  யுத்தம் ஆரம்பித்து விட்டது !

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி "இலவச கல்வி உரிமை சட்டம்"-தை மாநிலங்கள் அமுல்படுத்துவது தொடர்பான ஆட்சேபணையை குறிப்பிட்டு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
1.  மத்திய அரசு மக்களுடைய நலனுக்காக இதை செய்ய  உண்மையிலேயே விரும்புமானால், இச்சட்டத்தை அமுல்படுத்த மாநிலங்களுக்கு ஏற்படும் செலவு தொகையை, மத்திய அரசே வழங்க வேண்டும்.
2.  இச்சட்டத்தை அமுல் படுத்த  உ.பி மாநிலத்திற்கு சுமார் ஆண்டு ஒன்றுக்கு 18,000 கோடி ரூபாய் தேவை. இதில் 45% தொகையான ரூபாய் 8,000 கோடியை உ.பி. அரசு செலவு செய்ய வேண்டும். இது மாநில அரசிற்கு கஷ்டமான காரியமாகும்.
3. இச்சட்டத்தை அமுல் படுத்துவதற்கு முன்பே மாநில அரசுகளுடன் கலந்து பேசி, தேவையான நிதியை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் செய்யப்படவில்லை.
4. இச்சட்டத்தை அமுல்படுத்த அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
5. இதனை அமுல்படுத்த 4,596 தொடக்க பள்ளிகளையும்( PRIMARY SCHOOLS) , 2,349 நடு நிலை பள்ளிகளையும் (UPPER PRIMARY SCHOOLS)  புதிதாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இதற்கு 3,800 கோடி ரூபாய்கள் தேவை.
6. 3.25 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவேண்டும் .
7. நடு நிலை பள்ளிகளுக்கு 67,000 நிரந்திர ஆசிரியர்களையும், 44,000 பகுதி நேர ஆசிரியர்களைய்ம் நியமிக்க வேண்டியுள்ளது. இதனால் ஊதிய செலவாக ஆண்டு ஒன்றுக்கு 10,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
8. தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு செய்வதால், அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய சுமார் 3,000 கோடி வழங்கவேண்டும்.
இதுதான் கடிதத்தின் சாராம்சம்.
ஏன் இந்த எதிர்ப்பு?
இத்திட்டத்தை முழுமையாக செயல் படுத்த தன்னிடமும் நிதிவசதி இல்லை. மாநில அரசுகளிடமும் இல்லை என்பது தெரிந்திருந்தும், மத்திய அரசு அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்துள்ளது.அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இது சாதனை பட்டியலில் சேர்க்கப்படும். எதிர்கட்சியான மாயாவதி எப்படி இதை ஒப்புக்கொள்வார்?
மத்திய அரசும் மாநில அர்சுகளும் இணைந்து நிறைவேற்றப்படவேண்டிய இத்திட்டத்தை பற்றி மாநிலங்களுடன் விரிவான விவாதம் நடத்தாமல், தன்னிச்சையாக செயல்பட்டது தவறு 
இது ஆரம்பம் தான். விரைவில் மேற்கு வங்கம், கேரளா என ஒவ்வொரு மாநிலமும் ஆட்சேபணை குரல் எழுப்பும். .

ஆக மொத்தத்தில்  இச்சட்டமும்  ஏட்டு சுறைக்காயே என்பதில் சந்தேகம் இல்லை.

ஏப்ரல் மாதம் 1-ம் தேதியன்று " Right of Children to Free and Compulsory Education Act 2009." என்ற மத்திய அரசு சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் என்ன சொல்லுகிறது, அது எந்த அளவில் செயல் படுத்தப்படும் என்பதை பார்க்கலாம்.
சட்டம் என்ன சொல்லுகிறது?
1.  6 வயது முதல் 14 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அவர்களின் அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது.
2.  அருகாமையிலுள்ள அரசு, அரசு சார்பு கல்வி நிலையங்கள், இவர்களுக்கு கல்வி வசதியளிக்க வேண்டும்.
3.  குழந்தைகளின் வயதுக்கேற்ப  வகுப்பில் சேர்க்கப்படுவர். அதாவது 6 வயது குழந்தையை 1ம் வகுப்பு, 7 வயது குழந்தை 2 ம் வகுப்பு etc. இவ்விதம் ஆரம்பத்திலிருந்து இல்லாமல், நேரடியாக 2,3,4,5,6,7& 8-ம் வகுப்புகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, விஷேச பயிற்சி அளிக்கப்படும்.
4. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் பள்ளிகள் அமைக்கப்படவேண்டும். முறையான பயிற்சி பெற்ற தேவையான ஆசிரியர்க்ளை நியமிக்க வேண்டும். வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், நூலகம், உபகரணங்கள் இவை அவசியம் தேவை.
5. இதனால் மாநில அரசுக்கு ஏற்படும் செலவுத்தொகையில், அதாவது அதிகப்படியாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் ஊதியம், வகுப்பறைகள் கட்டுவதற்கான செலவு, உபகரணங்கள் போன்றவற்றிற்கு தனது பங்காக 55%
மத்திய அரசு வழங்கும்.
6. தனியார் கல்வி நிலையங்களில், சேர்க்கப்படும் மாணவர்கள் எண்ணிக் கையில் 25 சதவிகிதத்தை பொருளாதாரம், சமூகம் இவற்றில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கி இலவச கல்வி வழங்கவேண்டும்.
இது தான் இச்சட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும்.
சில புள்ளி விபரங்கள்
1. அரசு புள்ளிவிபரப்படி இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. இதில் பள்ளிக்கூடம் செல்லாதவர்களின் எண்ணிக்கை 92 லட்சம் என அரசு கூறுகிறது.
2.  இத்திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 34,000 கோடி ரூபாய் வீதம் ஆண்டுகளுக்கு 1.7 லட்சம் கோடி ரூபாய் தேவை என " University of Education Planning and Administration "கூறுகிறது.
3. இத்திட்டத்திற்கு சுமார் 12 லட்சம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை.
சில கேள்விகள்.
1.  1.7 லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும் இத் திட்டத்திற்கு சுமார் 90,000 கோடி தனது பங்காக மத்திய அரசு செலவு  செய்ய வேண்டும். இத்தொகை அர்சிடம் உபரி இருப்பு தொகையாக உள்ளதா? அல்லது வ்ரியாக வரும் வருமானத்திலிருந்து செலவு செய்யப்படும் என்றால், எந்த இனத்திலிருந்து பெறப்படும்?
2.  ஏற்கனவே மாநில அரசுகள் கல்விக்காக செலவு செய்து கொண்டிருக்கும் பொழுது, மத்திய அரசின் இத்திட்டத்திற்காக  செலவு செய்வார்களா? 
3.  மீதி தொகையாகிய 80,000 கோடியை ஜம்மு, காஷ்மீர் நீங்கலாக உள்ள அனைத்து மாநிலங்களும்  செலவு செய்ய வேண்டியுள்ளது. மாநிலங்களின் நிதி நிலைமை அந்த அளவிற்கு உள்ளதா? 
4.  மத்திய அரசிட்மிருந்து  பெறப்படும் 55% தொகை இத்திட்டத்திற்குத்தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு என்ன உத்திரவாதம்? 
5. பள்ளிக்கூடம் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 92 லட்சம் என கூறப்படுவது  எதன் அடிப்படையில். சமீபத்தில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதா?
இது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு மத்திய அரசிடமிருந்து  பதில் இல்லை. 
இந்த சூழ்நிலையில், மிகவும் அவசியமான இத்திட்டத்தை முழுமையாக செயல் படுத்த வாய்ப்பே இல்லை.
எனவே இச்சட்டமும்  ஏட்டளவில்தான் இருக்கும். 
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/